நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர்.

பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

கொரோனா அரக்கனை நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் விளக்கேற்றி தங்கள் ஒற்றுமையை காண்பித்தனர்.

ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் விளக்கேற்றி கொரோனாவுக்கு எதிராக பிரார்த்தனை செய்தனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து விளக்குகளையும் அணைத்து, விளக்குகளை ஏற்றி நாட்டு மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார்.

பிரதமர் மோடியின் தாயும், குஜராத்தில் தனது இல்லத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டார்.

நடிகர் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட தமிழ் நடிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் விளக்குகளை ஏற்றி பிரார்த்தித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே