தொன்னூறுகளில் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த் மீண்டும் டாப் ஸ்டாராக உருவெடுப்பாரா?
இந்தியில் வசூலை குவித்து அந்தாதுன் படத்தின் ரீமேக்கில், கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைகிறார் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு என்னும் வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். நடிகர் தியாகராஜனின் மகனான இவர், அறிமுகமான காலத்துலேயே மணிரத்னம், சங்கர் போன்ற உச்ச இயக்குனர்களின் படங்களில் நடித்து வீரநடை போட்டார். அது மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
விஜய்க்கு “இளையதளபதி” பட்டமும், அஜித்துக்கு “அல்டிமேட் ஸ்டார்” பட்டமும் கொடுப்பதற்கு முன்பாகவே பிரசாந்த்துக்கு டாப் ஸ்டார் பட்டம் கொடுத்து மாஸ் காட்டினார்கள் கட்டினார்கள் 90’s kids. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு ஹிட் படம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் பிரசாந்த்.
ராம்சரண் ஹீரோவாக நடித்த வினய விதேய ராமா என்ற தெலுங்கு படத்தில் குணச்சித்திர வேடத்தில் பிரசாந்த் நடித்ததை பார்த்து மனம் நொந்து போனார்கள் டாப் ஸ்டாரின் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என்ற மகுடத்தை தன் மகனுக்கு மீண்டும் சூட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட தியாகராஜன் பாலிவுட்டில் வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான அந்தாதுன் திரைப்படம் ஒரு பார்வையற்ற பியானோ இசைக் கலைஞனைப் பற்றியது. ஏற்கனவே ஷாக், ஜானி போன்ற பாலிவுட் படங்களை பிரசாரத்திற்காக ரீமேக் செய்து கையை சுட்டுக் கொண்டாலும் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த அந்தாதுன் படம் தன்னையும் தன் மகனையும் நிச்சயம் கைவிடாது என்று உறுதியாக நம்புகிறார் தியாகராஜன்.
பல இளம் இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் அந்தாதுன் ரீமேக்கை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்ஷன் காதல் படங்களை எடுப்பதில் கில்லாடியான கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கு ஒரு கம்பேக்கை நிச்சயம் தருவார் என்ற எதிர்பார்ப்பில் 20 கிலோ வரைக்கும் தனது உடல் எடையை குறைத்துள்ளார் பிரசாந்த்.
இந்த படத்தின் ரீமேக்கை வாங்குவதற்கு தனுஷ் முயற்சி செய்து கொண்டு வந்த நிலையில் தற்போது பிரசாந்த் வாங்கி இருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.