வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேரும் உடனடியாக பணியை தொடங்கலாம் – தமிழக அரசு உத்தரவு..!!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணிபுரிந்த பின்பே மருத்துவ பணி தொடர வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை காரணமாக இந்த 2 விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டில் படித்த 500 பேருக்கும் உடனடியாக பணி அமர்த்த தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே தற்போது வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இதனால் இந்த 500 மருத்துவர்களும், எந்தெந்த இடங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதோ அந்த இடங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதன்மூலம் மக்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கமுடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே