ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மனித பரிசோதனைக்காக சென்னை வந்தடைந்துள்ளன.

புனேவில் இருந்து சென்னை வந்த தடுப்பு ஊசிகளின் பரிசோதனை அடுத்த வாரம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பரிசோதனைக்கு தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை இரண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மனித பரிசோதனைக்காக ஆரோக்கியமாக இருக்கும் 300 பேர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து கண்டுபிடித்து இருக்கும் கொரோன தடுப்பு மருந்தான கோவிஷீல்டு இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தப் பரிசோதனையை ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் இணைந்து புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு சீரம் நிறுவனத்துக்கு ஆக்ஸ்போர்டு அனுமதி அளித்து இருந்தது.

இந்தியாவிலும் இந்த மருந்தை சீரம் இன்ஸ்ட்டிடியூட் தயாரிக்க இருக்கிறது. இந்தியாவில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து ஏற்கனவே பிரிட்டனில் மனித பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அங்கு பரிசோதிக்கப்பட்டதில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த மருந்து இந்தியாவில் 17 இடங்களில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் பல்வேறு கட்டங்களில் இந்த ஆய்வு நடந்து வருகிறது.

மனித பரிசோதனை முடிந்த பின்னர், இந்தியாவுக்கான இந்த தடுப்பு மருந்தை, புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட், தயாரித்து வழங்கும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே