ஹைதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.

ஐபிஎல் 2020 தொடரின் 56 ஆவது போட்டி ஹைதராபாத் – மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்னில் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் டி காக் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நிதானமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 36 ரன்களும், இஷான் கிஷன் 33 ரன்களும் அடித்தனர்.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கிரன் பொல்லார்ட் 25 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி 41 ரன்கள் அடித்தார்.

இறுதியில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை அடித்தது.

ஹைதராபாத் அணியில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், சபாஷ் நதீம் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரோஹித் சர்மா, டீ காக், இஷான் கிஷான் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்தார் சந்தீப் சர்மா.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே