வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கனமழை காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை 6 மணி வரை 144 தடை அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே