பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி 14 டன் எடையுள்ள வீணை..!!

பிரபல பின்னணி இசைப் பாடகியும், இசைக்குயில் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த பாடகி லதா மங்கேஷ்கரின் 92வது பிறந்தநாளான இன்று அவரின் புகழை போற்றும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 14 டன் எடை கொண்ட மிகப்பெரிய வீணை சிலையை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் முதுமை காரணமாக தனது 92வது வயதில் மரணமடைந்தார். அவரது இசைப்பயணம் முடிவடைந்தது குறித்து ஜனாதிபதி, பிரதமர், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

இன்று லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளாகும். எனவே அவரின் புகழை உயர்த்தும் வகையிலும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமாக உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 40 அடி கொண்ட பெரிய வீணை சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதன் எடை 14 டன் ஆகும். இந்த சிலையை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

ஏற்கெனவே உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் லதா மங்கேஷ்கரின் நினைவாக புதிய குறுக்கு சாலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வந்தது. அதன்படி உருவாக்கப்பட்ட அந்த சாலைக்கு மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் பெயர் சூட்டப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே