இந்தியாவில் ஒரே நாளில் 13 ஆயிரத்து 586 பேர் கரோனாவில் பாதிப்பு

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 13 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டனர். 336 பேர் உயரிழந்தனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 710 ஆகவும், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 248 ஆகவும் உயர்ந்துள்ளது. கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. குணடைந்தோர் சதவீதம் 53.79 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 65 பேர், தமிழகத்தில் 49 பேர், குஜராத்தில் 31 பேர், உத்தரப் பிரதேசத்தில் 31 பேர் உயிிரழந்தனர்.

கர்நாடகம், மேற்கு வங்கத்தில் தலா 12 பேர், ராஜஸ்தானில் 10 பேர், ஜம்மு காஷ்மீரில் 6 பேர், பஞ்சாப்பில் 5 பேர், ஹரியாணா, மத்தியப் பிரதேசத்தில் தலா 4 பேர், தெலங்கானாவில் மூவர், ஆந்திராவில் இருவர், அசாம், ஜார்க்கண்ட், கேரளாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,409 பேரும், டெல்லியில் 437 பேரும், தமிழகத்தில் 49 பேரும் பலியாகியுள்ளனர்.

குஜராத்தில் 28 பேர், உத்தரப் பிரதேசம், ஹரியாணாவில் தலா 18 பேர், மேற்கு வங்கத்தில் 10 பேர், ராஜஸ்தானில் 7 பேர், மத்தியப் பிரதேசத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 5 பேர், தெலங்கானாவில் 4 பேர், சத்தீஸ்கர், பிஹார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், பஞ்சாப், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 5,751 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 1,969 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,591 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 625 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 518 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 486 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 465 ஆகவும், ராஜஸ்தானில் 323 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 195 ஆகவும், ஹரியாணாவில் 134 ஆகவும், ஆந்திராவில் 92 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 114 பேரும், பஞ்சாப்பில் 83 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 71 பேரும், பிஹாரில் 44 பேரும், ஒடிசாவில் 11 பேரும், கேரளாவில் 21 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், உத்தரகாண்டில் 26 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 7 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 60,838 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,641 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 49,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,341 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 25,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,819 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 13,857 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,426 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 15,181 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 12,735 பேரும், ஆந்திராவில் 7,518 பேரும், பஞ்சாப்பில் 3,615 பேரும், தெலங்கானாவில் 6,027 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 5,555 பேர், கர்நாடகாவில் 7,944 பேர், ஹரியாணாவில் 9,218 பேர், பிஹாரில் 7,025 பேர், கேரளாவில் 2,794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,415 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 4,512 பேர், சண்டிகரில் 374 பேர், ஜார்க்கண்டில் 1,920 பேர், திரிபுராவில் 1,155 பேர், அசாமில் 4,777 பேர், உத்தரகாண்டில் 2,102 பேர், சத்தீஸ்கரில் 1,946 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 595 பேர், லடாக்கில் 687 பேர், நாகாலாந்தில் 193 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 109 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 130 பேர், சிக்கிமில் 70 பேர், மணிப்பூரில் 606 பேர், கோவாவில் 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை”.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே