கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அவற்றைப் போக்க வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய சுலபமான சில இயற்கைக் குறிப்புகளை பார்ப்போம்.

தக்காளிச்சாறு: ஒரு தேக்கரண்டி தக்காளிச்சாறுடன் ஒன்றரை தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு கலந்து கருவளையத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வெள்ளரிக்காய் :
 வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து கண்களுக்கு ஓய்வு கொடுத்தால் கருவளையம் மறையத்
தொடங்கும்.

உருளைக்கிழங்குச்சாறு: உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணைச் சுற்றி தடவி உலரவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, ஒரு சில வாரங்களில் கண் கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெயை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் மறையும். இரவில் தூங்கும் முன்பு பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவலாம்.

சோற்றுக் கற்றாழை: சோற்றுக்கற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.

எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒற்றி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் விரைவில் மறையும்.

புதினா: புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும்.

பால்: குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களை சுற்றி ஒத்தி 15 நிமிடங்கள் உலரவிட்டு பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்துவந்தால் கருவளையம் மறையும்.

கேரட் சாறு: கேரட்டை நன்றாக நறுக்கிப் பொடியாக்கி மிக்ஸியில் போட்டு அடித்து அதன் சாற்றை எடுத்து, அதனை முகத்தில் தடவலாம். சிவப்பான சருமம் இருப்பவர்களுக்கு இது சிறந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே