ஹாங்காங்கில் 100 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்

ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களை தேசிய நாளான அக்டோபர் 1ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டுவர சீனா தீவிரமாக திட்டமிட்டுள்ளது.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவரை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டம் நடந்து வருகிறது.

ஆரம்பத்தில் சுமூகமாகச் சென்ற போராட்டம் தற்போது வன்முறைக்களமாகி உள்ளது. 

தொடர் போராட்டங்களால் கவலையில் ஆழ்ந்துள்ள சீனா, அதனை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக குவாங்டாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் போலீசாரை தயார் நிலையில் வைத்துள்ளது.

வரும் அக்டோபர் 1ம் தேதி சீனாவின் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது. அதற்குள் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே