“விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர் ” : முத்தரசன்

நீர்நிலைகளை தூர்வார்வதற்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதியை ஆளுங்கட்சியினர் எடுத்துக் கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளரிடம் பேசிய அவர் காவிரி பாசன பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை என்றார். ஒரு சில தினங்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாகவும், எனினும் ஒரு போக சம்பா சாகுபடி கூட மேற்கொள்ள முடியாமல் டெல்டா விவசாயிகள் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் முத்தரசன் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு மாதமாக ஆறு, குளம், வாய்க்கால்களை தூர்வாராமல், தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் அவசரமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவர் விமர்சித்தார். தூர்வார்வதற்கு ஒதுக்கப்படும் நிதியை ஆளுங்கட்சியினரே அப்படியே மொத்தமாக எடுத்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே