முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை

ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி ஒருவர் குற்றம்சாட்டியதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்திடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் வைத்துள்ள சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, தான் குளிக்கும்போது எடுத்த படத்தை வெளியிட்டுவிடுவதாகக் கூறி மிரட்டி, ஆதரவாளர்களால் துப்பாக்கி முனையில் மிரட்டி அழைத்து வரப்பட்டு ஓராண்டாக சின்மயானந்த் தன்னை பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், அதை தன் கண் கண்ணாடியில் கேமரா பொருத்தி பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இதன் பிறகு மாயமான அவரை கண்டுபிடித்து போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவியிடம் பூட்டிய அறையில் விசாரணை நடத்திய நீதிபதி, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

உடல் நலமின்மை எனக் காரணம் கூறி சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், நேற்று மாலை 6.20 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, பெண்ணின் குற்றச்சாட்டுக்கள் குறித்து கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடத்தியதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே