பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குததால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 83 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 70 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ஒரு ரூபாய் 98 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் ஒரு ரூபாய் 61 காசுகளும் அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே