ஒப்பந்த விதிமுறையை மீறியதாக வந்த புகாரை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தினேஷ் கார்த்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் 20 ஓவர் லீக் தொடரில் செப்டம்பர் ஐந்தாம் தேதி நடைபெற்ற தொடக்க போட்டியின்போது Dragon knight riders அணியுடன் தினேஷ் கார்த்திக் இருந்துள்ளார். பிசிசிஐயிடம் அனுமதி பெறாமல் T20 லீக்கில் பங்கேற்றதாக தினேஷ் கார்த்திக் மீது புகார் எழுந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தினேஷ் கார்த்திக் க்கு பிசிசிஐ தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரதில் பிசிசிஐயிடம் மன்னிப்பு கோரிய தினேஷ் ‘இனிமேல் அந்த அணியுடன் இணைய மாட்டேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.