நீட் தேர்வு ஆள் மாறாட்ட செயலுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை என்றும் அரசு இதனை முறையாக கவனித்து இது போன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடி அகழாய்வு ஆதாரங்களை பாதுகாக்க தமிழகத்திலேயே ஒரு மையம் உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.