நடிகர் மாதவனின் மகன் சர்வதேச போட்டியில் வெள்ளி வென்றார்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

நடிகர் மாதவன் தன் மகன் வேதாந்த் ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது பெருமிதமளிப்பதாகக் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன்- சரிதா தம்பதியின் 14 வயது மகன் வேதாந்த். இவர் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கெனவே தேசிய அளவில் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் தங்கம் வென்ற வேதாந்த், கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதே பிரிவில் வெண்கலம் வென்றார்.

இந்த வெற்றிகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் மாதவன் தற்போது, இந்தியா சார்பில் சர்வதேச அரங்கில் பிரதிநிதியாகப் பங்கேற்று இந்தியத் தாய்க்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருப்பதாக தன் மகன் குறித்து பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2-ம் குழு நீச்சல் போட்டியில் 4 x 100 மீட்டர் ரிலேவில் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் வேதாந்த், உத்கார்ஷ் பாட்டீஸ், சாஹில் லஸ்கர், ஷோவான் கங்குலி ஆகிய 4 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.

தாய்லாந்து குழு முதலிடம் பிடித்த நிலையில், 2-ம் இடம் பிடித்த வேதாந்தின் குழு வெள்ளி வென்றது. ஜப்பான் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த மாதவன் பணிவோடும், பெருமிதத்தோடும் பகிர்ந்துள்ளார். 

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே