தொழிலதிபர் சித்தார்த் மரணம் தொடர்பான தடயவியல் அறிக்கை

கர்நாடகாவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் சித்தார்த் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஃபி டே உரிமையாளரான அவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில் அவரது மரணம் தொடர்பான தடயவியல் அறிக்கையில் நீரில் மூழ்கியதால் சித்தார்த்தின் நுரையீரலில் தண்ணீர் புகுந்து இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை மர்மச்சாவு என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சித்தார்த் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே