தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்டவர் தியாகி இமானுவேல் சேகரனார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 62 வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் பெரியசாமி, உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் அடுத்த முறை திமுகதான் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.