பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருக்கிறது. தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருக்கிறார்.
திரைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்த ஆண்டிற்கு, அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருக்கிறார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் பிறந்த பால்கே, இந்திய சினிமாவின் முதல் திரைப்படமான அரிசந்திராவை 1913ல் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து 19 ஆண்டுகளில் அவர் 95 திரைப்படங்களையும், 27 குறும்படங்களையும் எடுத்தார்.
இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் அவரது நினைவாக ஆண்டு தோறும் திரைக்கலைஞர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளருக்காக இந்த விருது, தங்க தாமரை தாங்கிய பதக்கத்தையும், சால்வையையும், 10 லட்ச ரூபாயையும் உள்ளடக்கியது ஆகும். இதுவரை 65 பேருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதை நடிகர் சிவாஜி கணேசன் 1996 ஆம் ஆண்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்துறையில் தாதாசாகிப் பால்கே விருது மிக உயரிய விருதாக போற்றப்படுகிறது. இயக்குனர் பாலச்சந்திரன் அவர்களும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.