“தர்பார்” படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்

“தர்பார்” படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு.

இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது.

இந்தநிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு நடிகர் ரஜினியின் “தர்பார்” படத்தின் 2-வது லுக் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

தர்பார் திரைப்படம், வரும் ஜனவரி 14-ம் தேதி, பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

இதனை டுவிட்டரில் #DarbarSecondLook என்ற ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே