டெல்லி காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

காந்தியடிகளின் 150-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்ப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலரும் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே