சுவாமி சின்மயானந்தா மீண்டும் சிறையில் அடைப்பு

உத்தரப்பிரதேசத்தில் சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா மருத்துவ சிகிச்சை முடிவடைந்ததால் மீண்டும் ஷாஜகான்புர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே சிறையில் கழித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டதாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்மயானந்தாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த மாணவி பணம் பறிக்க முயன்றதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமீன் மனுவை ஷாஜகான்புர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதேபோன்று சுவாமி சின்மயானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே