குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்

தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் கொட்டுகிறது.

இந்நிலையில் மூன்று நாள் தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதமான சூழல் நீடிப்பதுடன் சாரலும், மழையும், வெயிலும் இடையிடையே வருவதால் சுற்றுலா பயணிகள் குதூகலமடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே