காஷ்மீரில் இயல்பு நிலை மாற சில காலம் ஆகும் – மாயாவதி

காஷ்மீர் மாநிலத்திற்கு செல்வதற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் யோசித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை அம்பேத்கர் ஆதரித்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் அந்த சட்டப் பிரிவை நீக்கும் நடவடிக்கைகள் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். 370ஆவது பிரிவு ஏற்படுத்தப்பட்டு அறுபத்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதனை நீக்கி உள்ளதால் இயல்பு நிலை திரும்ப சில காலம் ஆகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

எனவே காத்திருப்பது நல்லது என்றும் இதனையே உச்சநீதிமன்றம் கருதுவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் காஷ்மீர் செல்ல எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சி மத்திய அரசுக்கும் காஷ்மீர் ஆளுநருக்கும் அரசியல் செய்ய வாய்ப்பு அளிக்கும் என்ற மாயாவதி காஷ்மீருக்கு செல்லும் முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் யோசித்திருக்க வேண்டும் என்றும் அதுவே நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே