காப்பான் தியேட்டரில் ரவுடிகள் அட்டூழியம்..! மேலாளருக்கு அடி உதை

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளரான இருப்பவர் மில்லர். இவர் தனது மனைவியுடன் வியாழக்கிழமை இரவு காப்பான் படம் பார்க்க வடுகநாதன் திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தாமல் தனியாக நிறுத்த திரையரங்கு மேலாளர் மரி அலெக்சாண்டர் பார்க்கிங்கில் விட்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் வந்ததால் வந்து கவனித்துக் கொள்கிறேன் என்று கூறிச்சென்ற அமமுக ஒன்றிய செயலாளர் மில்லர், படம் முடியும் நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கூலிப்படையினர் சிலரை அழைத்து வந்து மேலாளர் மரிஅலெக்சாண்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது

தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினர் தியேட்டர் மேலாளரை விரட்டி, விரட்டி தாக்கி, அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகும் அடங்காமல் அவரை கையை உடைத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகின்றது

அதிர்ஷடவசமாக அங்கு காப்பான் போல வந்த ரோந்து காவலர் ஒருவர் அந்த கூலிப்படையினரிடம் இருந்து மேலாளர் மரி அலெக்சாண்டரை காப்பாற்றினார்.

போலீசை பார்த்து அங்கிருந்து கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டனர். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மில்லர், சந்தோஷ், நிவாஷ், அரவிந்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 5 பேரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே