கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர்கள்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் பழக்கம் சில இடங்களில் பரவியது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பதை குற்றமாக அறிவித்து சட்டம் 1994 இல் இயற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பேட்டி பச்சாவோ சமிதி என்ற அமைப்பு குவாலியரில் கருவில் உள்ள குழந்தையின் செயல்பாட்டை அறிவிக்கும் மருத்துவர்களை கண்டுபிடிக்க ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றை நடத்திய போது மருத்துவர்கள் சூட்சம திரிவேதி எஸ்கே ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு குவாலியரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்த நிலையில் மூவருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே