உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகல துவக்கம்

கத்தார் தலைநகர் தோஹாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ளன.

கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் வண்ணமயாக நடைபெற்ற துவக்க விழாவில் கத்தார் அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதையொட்டி நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகளையும், நடன நிகழ்ச்சிகளையும் ஏராளமானோர் கண்டு களித்தனர்.

இந்தப் போட்டிகளில் சுமார் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஆண்கள் பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் 24 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அவற்றுடன் கூடுதலாக கலப்பு பிரிவினர் பங்கேற்கும் தொடர் ஓட்டமும் நடைபெற உள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அங்கு நிலவும் வெப்ப சூழலை தவிர்ப்பதற்காக இரவு நேரங்களிலும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே