கேஎப்சி என்றாலே சிக்கன் தான் மக்களுக்கு ஞாபகம் வரும். ஆனால் அந்த நிறுவனம் முதல் முறையாக காய்கறிகளை கொண்டு கோழிக்கறி போன்ற சுவை தரும் சைவ உணவை தயாரித்து உள்ளது.
சோதனை முயற்சியாக இந்த சைவ உணவை அமெரிக்காவில் உள்ள அதன் உணவகத்தில் கேஎப்சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது. அப்போது இந்த சைவ உணவு கோழிக் கறியை போல சுவையாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த உணவை சைவ பிரியர்களுக்காக உலகம் முழுவதும் கொண்டுவர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.