இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விசாகபட்டினத்தில் தொடங்கிய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். இதனை அடுத்து பேட்டிங்கை தேர்வு செய்வதாக அவர் அறிவித்தார்.

துவக்க வீரராக ரோஹித் ஷர்மா களம் இறங்கியுள்ளார். இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆல் ரவுண்டரான ஜடேஜாவும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இன்று விளையாடுகிறார்.

இப்போட்டியில் மயங்க் அகர்வாலுடன் சேர்ந்து துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, அரை சதம் கடந்தார்.

நிதானமாக விளையாடும் ரோகித் சர்மா, அவ்வப்போது அதிரடி காட்டி, பந்துகளை பறக்க விட்டார். இரண்டு சிக்சர்களையும் அவர் விளாசினார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே