இந்தியாவில் 24 மணிநேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா உறுதி : 24 மணிநேரத்தில் 587 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6லட்சத்து 13 ஆயிரத்து 146 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 89லட்சத்து 06ஆயிரத்து 297 பேர் குணமாகியுள்ளனர்.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 11,18,043லிருந்து 11,55,191 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,24,528 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 587 பேர் பலியாகியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே