அரசு பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பூச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளிகள் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூற, பொதுமக்கள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை பலமுறை எச்சரித்து உள்ளதாக தெரிகிறது. பொதுமக்களின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைமையாசிரியர் சுப்பிரமணி மாணவிகளிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை அன்று மாணவி ஒருவரை அழைத்து சுப்பிரமணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் இருந்து கிளம்பி அழுதுகொண்டே நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மாணவிக்கு நடந்த கொடுமையைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பெண்ணாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா மற்றும் எரியூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் சுப்பிரமணியர் போட்ச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

வழிகாட்டும் குருவாக இருக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் போது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே