அயோத்தி விவகாரம்- இந்துக்கள் தரப்பில் மறுப்பு

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விசாரணையை வரும் 18ம் தேதிக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்து-முஸ்லீம்களிடையே சமரசம் செய்ய நியமிக்கப்பட்ட குழுவில், இணைய மாட்டோம் என்று ஸ்ரீராமபிரான் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் நீதிபதிகளுக்கு தெரிவித்தார்.

சமரசம் செய்ய மூன்று நபர் குழுவை நியமித்துள்ள உச்சநீதிமன்றம் அக்குழுவை தொடர்ந்து இயங்க அனுமதியளித்ததையடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கலாகியுள்ளன.

2 புள்ளி 77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ஸ்ரீராமபிரானின் தரப்பு வழக்கறிஞரான ராம் லல்லா விராஜ்மன் ஆகிய மூன்று பிரிவினருக்கும் சரிசமமாக பங்கிட்டுத் தரும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமரச குழுவினருக்கு இந்துக்கள் தரப்பில் மிகக்குறைந்த அளவே ஆதரவு காணப்படுகிறது. இந்நிலையில் தினசரி விசாரணையை தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனக் குழு, இவ்வழக்கில் வாதங்களை பதிவு செய்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே