அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என முஸ்லீம்கள் தரப்பு ஒப்புதல்

அயோத்தி ஸ்ரீராமர் பிறந்த இடம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாக முஸ்லீம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் முன்பு முஸ்லீம்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி, ராம் சாபுத்திரா என்று அழைக்கப்படும் இடம்தான் ராமர் பிறந்த மிகச்சரியான இடம் என்று தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதிக்குள் அந்த இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜிலானி, இதனை ஏற்றுக் கொள்வதாக கூறினார். இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் ராம் சாபுத்திராதான் ராமர் பிறந்த சரியான இடம் என்பதை எந்த நீதிமன்றமும் உறுதிப்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே