சென்னையில் அதிமுகவின் பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அவரின் தந்தை பத்திரிகையாளர்கள் முன் கதறி அழுதார்.
இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் ‘அதிமுகவின் அராஜகத்தால் இளம்பெண்ணின் உயிர் பறிபோய் உள்ளதாக’ கூறினார். மேலும், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு கோவையில் அதிமுக பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.