லெமன் ஜூஸ் கூட ஆலிவ் ஆயில் சேர்த்து குடிச்சா உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

நமக்கு ஏற்படும் சின்னஞ்சிறிய பிரச்சினைகளிலிருந்து இதய ஆரோக்கியம் வரை லெமன் ஜூஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மேம்படுத்த முடியும். இது எப்படி சாத்தியம் என்பதை கீழ்க்கண்டவாறு நாம் அறிந்து கொள்வோம்.
சில சமயங்களில் எளிய பொருட்கள் கூட மிகப்பெரிய பலனை அளிக்கும் வல்லமை படைத்ததாக இருக்கும். அந்த வகையில் பார்க்கும் போது லெமன் ஜூஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் இதுவரை நீங்கள் கேட்டிராத நன்மைகளை அளிக்கக் கூடியது. ஆலிவ் எண்ணெய் மற்றும் லெமன் ஜூஸ் கொண்டு உங்க சரும அழகு முதல் இதய ஆரோக்கியம் வரை மேம்படுத்த முடியுமாம்.

இந்த இரண்டு பொருட்களிலும் நம் ஆரோக்கியத்தையும் நம் சரும அழகையும் மேம்படுத்தக் கூடிய தன்மைகள் நிறையவே உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்கள், நல்ல கொழுப்புகள், விட்டமின் சி போன்ற நன்மை தரும் மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த இரண்டு பொருட்களும் இன்னும் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று நாம் அறிந்து கொள்வோம்.
​சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மக்கள் தங்கள் சருமம் வயதாகமல் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்க சருமம் இளமையாகவும் மினுமினுப்புடனும் இருக்க நீங்க செய்ய வேண்டியது எல்லாம் லெமன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவை இருந்தால் போதும். இந்த இரண்டு கலவையிலும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அவை உங்க சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் லெமன் சாறு சேர்த்து சருமத்தில் தேய்த்து வர உங்க சரும ஆரோக்கியம் மேம்படுவதை நீங்கள் காணலாம்.

​உடல் எடையை குறைக்க பயன்படும் அற்புத கலவை
எடை இழப்பு என்பது இன்றும் பலரும் போராடும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் உங்க உடல் எடையை எளிதாக குறைக்க ஆலிவ் எண்ணெய் மற்றும் லெமன் சாறு உதவுகிறது. அவை உங்க மெட்டா பாலிசத்தை விரைவுபடுத்த உதவுகிறது. எடை அதிகரிப்பதை தடுக்கிறது. இதன் மூலம் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

​வலிக்கு நிவாரணம் அளிக்கும் மருந்து
நமக்கு கடுமையான வலிகள் ஏற்படும் போது உடம்பு முழுவதும் அசெளகரியத்தை உணருவோம். அன்றாட வேலைகளைக் கூட சரியாக செய்ய இயலாது. இந்த வலியை போக்க ஆலிவ் எண்ணெய் மற்றும் லெமன் சாறு சிறந்த வலி நிவாரணி கலவையாக பயன்படுகிறது. ஒரு ஸ்பூன்ஃபுல் ஆலிவ் எண்ணெய் மற்றும் காலையில் சுமார் 3 சொட்டு எலுமிச்சை சாறு போதுமானது. உங்க உடம்பில் ஏற்படும் வலியை விரட்டி விட முடியும்.

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆலிவ் எண்ணெய் மற்றும் லெமன் சாறு எப்பொழுதும் இதய செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, உங்க நரம்புகள் மற்றும் தமனிகள் செயல்படுவதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இதய செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

​கெட்ட கொழுப்புக்களை குறைத்தல்
நிறைய பேர் வயிற்றை சுற்றியுள்ள கெட்ட கொழுப்பை கரைக்க ஓட்டம், நடைபயிற்சி, ஜிம் என்று ஓட வேண்டியிருக்கிறது. ஆனால் உங்ள உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க லெமன் சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் போதுமானது. ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உடலில் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. எனவே இந்த இரண்டு பொருட்களை நீங்கள் கையில் எடுத்தால் போதும் கெட்ட கொழுப்புக்களை குறைக்க முடியும்.

​தொண்டை புண்ணை விரட்டுகிறது
சிலருக்கு தண்ணீர் மாற்றி குடித்தாலோ அல்லது மழைக்காலம் வந்துவிட்டாலே அல்லது குளிர்ந்த பானங்கள் குடித்தாலோ உடனே தொண்டை புண் ஏற்பட ஆரம்பித்து விடும். அது அப்படியே சலதோஷம், இருமல், காய்ச்சல் என்று அடுத்தடுத்த நிலைக்கு பரவ ஆரம்பித்து விடும். எனவே தொண்டை புண்ணை ஆரம்பத்திலேயே விரட்டுவதன் மூலம் சலதோஷம் போன்றவை தொற்றாமல் தடுக்க முடியும். அதற்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுகிறது. எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி உள்ளது, இது சுவாச பகுதியில் சளி உற்பத்தியைத் தவிர்க்க நல்லது.எனவே, மேம்பட்ட சுவாச ஆரோக்கியத்திற்காக இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டு பொருட்களும் நம்மை ஏராளமான உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பதால் இதன் பயன் அறிந்து பயன்படுத்துவது நல்லது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே