பெரும்பாலான பழைய டிக்டாக்கர்கள் டவுன்லோட் செய்த மாற்று App இதுதான்!

டிக்டாக் மற்றும் இதர 58 சீன ஆப்களை இந்திய அரசாங்கத்தின் தடையானது, இந்தியாவில் உருவாக்கம் பெற்ற ஆப்கள் பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு வழியை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற ஆப்ஸ் சிறிது காலமாகவே கூகுள் [பிளே ஸ்டோரில் இருந்தபோதிலும் கூட தற்போது தான் லிஸ்டில் மேல்நோக்கி வரத்தொடங்கி உள்ளன.
குறிப்பாக டிக்டாக் விட்டுச்சென்ற ‘வெற்றிடத்தை’ பல இந்திய ஆப்கள் நிரப்புகின்றன. அப்படியாக பெரும்பாலான பழைய இந்திய டிக்டாக்கர்கள் டவுன்லோட் செய்த டாப் 10 இந்திய ஆப்களை பற்றிய தொகுப்பே இது.

இந்த 10 ஆப்களில் ஒன்றை நீங்கள் டவ்ன்லோட் செய்திருந்தால், வாழ்த்துக்கள், நீங்க; டிக்டாக்கில் அடைந்த அதே பிரபலத்தை கூடிய விரைவில் அடைந்து விடுவீர்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் டிக்டாக் மாற்றை நீங்களும் பயன்படுத்துவதே ஆகும்!

  1. லிட்லாட் (LitLot): இலவசம், Android இல் கிடைக்கிறது!
    இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டிக்டாக் பயன்பாட்டின் மற்றொரு இந்திய போட்டியாளராகும். ஆப்பின் விளக்கத்தின்படி, லிட்லாட் பயன்பாட்டில் பியூட்டி, பில்டர்ஸ் மற்றும் ம்யூசிக் உடன் கூடிய அற்புதமான குறுகிய வீடியோக்களை உருவாக்க அனைத்து அம்சங்களும் உள்ளன.
  2. ரிஸில் (Rizzle): இலவசம், Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது!
    ரிஸில் ஆப் “100% இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என்றும், “ரிஸில் என்பது கோலாப்ஸ் மற்றும் இன்டராக்சன்களுக்கான 60 விநாடி வீடியோ ஆப் ஆகும். உலகளாவிய மேடையில் தங்கள் குரல்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த இந்தியாவின் விருப்பமான குறுகிய வீடியோ ஆப்… நண்பர்களுடன் கோலாப்ஸ் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்கான எளிதான வழி இது. உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன் எதை பற்றியும் பேசுங்கள்” என்றும் இதன் பிளே ஸ்டோரில் விளக்கம் கூறுகிறது.
  3. போலோ இந்தியா (Bolo Indya): இலவசம், Android இல் கிடைக்கிறது!
    போலோ இந்தியா, பெயருக்கு ஏற்றது போல ஒரு இந்திய வீடியோ பயன்பாடு ஆகும். தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, பஞ்சாபி மற்றும் ஒடியா உள்ளிட்ட பல மொழிகளின் ஆதரவுகளை கொண்ட இந்த ஆப் வழியாக குறுகிய வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம். ஆப்பின் விளக்கத்தின்படி, பயனர்கள் தங்கள் சேவைகள், அனுபவம், கருத்துகள் மற்றும் அறிவு ஆகியவற்றிற்கான மேடையில், நீங்கள் நம்பும் சக இந்தியர்களுடன் வீடியோக்களை உருவாக்கலாம், வீடியோக்களைக் காணலாம், சேவைகளைக் கண்டறியலாம் மற்றும் அவற்றை உங்கள் உள்ளூர் மொழியில் பயன்படுத்தலாம்.
  4. மோஜ் (Moj): இலவசம், Android இல் கிடைக்கிறது!
    இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு டிக்டாக் மாற்றாகும். “மோஜ் ஆப்பில் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான திறமையான கலைஞர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பை நீங்கள் பெறலாம், மேலும் உங்கள் நகரத்திலிருந்தோ அல்லது உங்களுக்கு அருகிலுள்ள இளைஞர்களுடனோ நட்பையும் பெறலாம்” என்று ஷேர்சாட்டின் ஷார்ட் வீடியோ ஆப்பின் கூகுள் பிளே ஸ்டோர் விளக்கம் கூறுகிறது.
  5. ட்ரெல் (Trell): இலவசம், Android மற்றும் iOS இல் கிடைக்கிறது!
    இந்திய ஆப் ஆன ட்ரெல் மற்றொரு டிக்டாக் மாற்றாகும். இந்த ஆப்பின் விளக்கமானது “தினசரி அனுபவங்கள், DIY, சமையல், பயணம், ஃபேஷன், அழகு, உறவு, ஆரோக்கியம் மற்றும் பலவற்றை சிம்பிள் வீடியோ வடிவமைப்பில் கண்டுபிடிப்பதற்கான ஒரே இடமாகும்” என்று கூறுகிறது. இந்த ஆப் பல மொழிகளில் கிடைக்கிறது.
  6. எம்எக்ஸ் டாக்கா டக் (MX TakaTak) இலவசம், Android இல் கிடைக்கிறது!
    எம்எக்ஸ் பிளேயர்ஸின் டகாடக், இந்தியாவை சேர்ந்த மற்றொரு டிக்டாக் போட்டியாளர் ஆகும். ஆப்பின் கூகுள் பிளே விளக்கத்தின்படி, “சமூக ஊடகங்களில் நீங்கள் பார்க்கக்கூடிய மற்றும் பகிரக்கூடிய உண்மையான மற்றும் வேடிக்கையான வீடியோக்களை MX TakaTak உங்களுக்கு வழங்குகிறது. சாட் டப்பிங், நகைச்சுவை, கேமிங், DIY, உணவு, விளையாட்டு, மீம்ஸ் மற்றும் பலவற்றிலிருந்து அனைத்து வகையான வீடியோக்களையும் ப்ரவுஸ் செய்யுங்கள்” என்கிறது. இதுவும் சமயம் தமிழ் வலைதளத்தின் தாய் நிறுவனமான டைம்ஸ் இன்டர்நெட்டுக்கு சொந்தமான ஆப் ஆகும்.
  7. ஹாட்ஷாட்ஸ் (HotShots): இலவசம், Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது!
    கானாவிற்கு சொந்தமான ஹாட்ஷாட்ஸ் ஆப் குறுகிய வீடியோக்களையும் ஸ்டோரீஸ்களையும் உருவாக்க மற்றும் பகிர அனுமதிக்கிறது. கானா ஆப்பில் உள்ள ஒரு பிரிவு மூலம் புதிய சேவை கிடைக்கும். கானா என்பது சமயம் தமிழ் வலைதளத்தின் தாய் நிறுவனமான டைம்ஸ் இன்டர்நெட்டுக்கு சொந்தமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  8. ரோபோசோ (Roposo): இலவசம், Android மற்றும் iOS இல் கிடைக்கிறது!
    ரோபோசோ மற்றொரு இந்திய டிக்டாக் போட்டியாளர் ஆப் ஆகும். இது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி, பெங்காலி, மலையாளம், ஒடியா மற்றும் அசாமி போன்ற மொழிகளை ஆதரிக்கிறது. “ஷார்ட்வீடியோ மேக்கிங் மற்றும் வீடியோ பில்டர்ஸ், GIF ஸ்டிக்கர்கள் மற்றும் எபெக்ட்ஸ்களைப் பயன்படுத்தி எளிதான புகைப்பட எடிட்டிங் ஆகியவற்றிற்காக ரோபோசோவைப் பதிவிறக்குங்கள், இது ஸ்லோ மோ, டைம்லேப்ஸ், நேச்சுரல் லைட் போர்ட்ரெயிட், ஸ்டுடியோ லைட், எட்ஜ் லைட் ஆகியவற்றில் வீடியோக்களை உருவாக்க உதவுகிறது.
  9. சிங்கரி (Chingari): இலவசம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கிறது!
    “வாருங்கள், வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த வீடியோக்களைத் தேடுங்கள், ஃபீட்டில் உலவுங்கள், படைப்பாற்றல் பெறுங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உடனடியாக பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று இந்த டிக்டாக் போட்டியாளரின் பிளே ஸ்டோர் விளக்கம் கூறுகிறது. இந்த ஆப் பல இந்திய மொழிகளை ஆதரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  10. மிட்ரான் (Mitron): இலவசம், Android இல் கிடைக்கிறது! மிட்ரான் ஒரு ஷார்ட் வீடியோ மற்றும் சமூக தளமாகும் “பயனர்கள் தங்கள் வீடியோக்களை உருவாக்க, எடிட் செய்ய மற்றும் பகிர்ந்து கொள்ள மிட்ரான் ஒரு எளிதான மற்றும் தடையற்ற இடைமுகத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த வீடியோக்களின் லைப்ரரியையும் நீங்கள் ப்ரவுஸ் செய்யலாம்” என்று பிளே ஸ்டோரில் இந்த ஆப் சார்ந்த விளக்கம் கூறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே