எஸ்பிஐ பிஓ அட்மிட் கார்டுகள் 2020 ஐ (SBI PO admit cards 2020) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) இப்போது வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ பிஓ தேர்வு 2020க்கு (SBI PO admit cards 2020) ரிஜிஸ்டர் செய்தவர்கள் இப்போது ஸ்டேட் வங்கியின் (State Bank) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு அவர்களின் எஸ்பிஐ பிஓ ஹால் டிக்கெட் 2020 ஐ (SBI PO hall ticket 2020) டவுன்லோட் செய்து கொள்ளலாம் .

எஸ்பிஐ பிஓ தேர்வு 2020 (SBI PO exam 2020) டிசம்பர் 31 முதல் 2021 ஜனவரி 5 வரை நடத்தப்படும்.

தேர்வர்கள் எஸ்பிஐ பிஓ அட்மிட் கார்டு 2020ஐ 2021 ஜனவரி 6 வரை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பொதுவாக தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் (hall ticket) என்பது ஒரு முக்கியமான ஆவணம்.

அதோடு அட்மிட் கார்டு (admit card) இல்லாமல் எஸ்பிஐ பிஓ தேர்வு (SBI PO exam) நடைபெறும் தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

அவர்கள் தேர்வு மையங்களுக்குள் (exam centres) நுழைய அட்மிட் கார்டுடன் செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் (ID proof) எடுத்துச் செல்ல வேண்டும்.

எஸ்பிஐ பிஓ அட்மிட் கார்டு 2020ஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது (How to download SBI PO admit card 2020) : 

ஸ்டெப் 1: Googleல் , SBIயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கான URL ஐ sbi.co.in உள்ளிடவும்.

ஸ்டெப் 2: முகப்புப்பக்கத்தில், ‘Careers’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: இங்கே, எஸ்பிஐ பிஓ காலிபணியிட லிங்க்கை( SBI PO vacancy link) தேடுங்கள்

ஸ்டெப் 4: எஸ்பிஐ பிஓ அட்மிட் கார்டு 2020க்கான (SBI PO admit card 2020) லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

ஸ்டேப் 5: உள்நுழைய (Login) பதிவு எண் மற்றும் பிறந்த தேதி (registration number and date of birth) ஆகியவற்றை உள்ளிடவும்

ஸ்டெப் 6: எஸ்பிஐ பிஓ 2020 அட்மிட் கார்டு (SBI PO 2020 Admit card) ஸ்கிரீனில் தோன்றும்

ஸ்டெப் 7: ஹால் டிக்கெட்டைப் டவுன்லோட் செய்து, பிரிண்ட்அவுட் (printout) எடுக்க பிரிண்ட் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

ப்ரொபஷனரி ஆஃபீஸர்ஸ்க்கான (Probationary Officers (PO)) 2,000 காலியிடங்களை நிரப்புவதற்காக எஸ்பிஐ இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மொத்த காலியிடங்களில், 810 இடங்கள் பொது பிரிவினருக்கு (General category) ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் 300 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கும் 200 (Economically Weaker Section) இடங்களும், பட்டியல் பழங்குடியினருக்கு (Tribe) 150 இடங்களும் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (ஓ.பி.சி) 540 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ பிஓ 2020 க்கான முதனிலை தேர்வில் 100 கேள்விகள் இருக்கும். குவாண்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட் மற்றும் ரீசனிங் (Quantitative Aptitude and Reasoning) பிரிவில் 35 கேள்விகளும் மற்றும் ஆங்கில மொழியின் 30 கேள்விகளும் இருக்கும்.

எஸ்பிஐ பிஓ 2020 தேர்வுக்கு, மொத்தம் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். எஸ்பிஐ பிஓ பிரிலிம்ஸ் தேர்வில் வெற்றிபெறுவபவர்கள், எஸ்பிஐ பிஓ மெயின் தேர்விற்கு (SBI PO mains 2020) அழைக்கப்படுவார்கள்.

எஸ்பிஐ பிஓ மெயின் தேர்வு 2020க்கு தகுதி பெற்றவர்கள் பின்னர் நேர்காணல் சுற்றுக்கு அழைக்கப்படுவார்கள்.

இறுதி தகுதி பட்டியல் நேர்காணலுக்குப் பிறகு வெளியிடப்படும். மூன்று நிலைகளிலும் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு எஸ்பிஐ பிஓ தேர்வு 2020 இறுதி முடிவை (SBI PO Exam 2020 result) அறிவிக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே