வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சித் துவக்கப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு வரும் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரடிகர் ரஜினி, சென்னை போயஸ் கார்டனில் இன்று சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேசிய அவர், டிசம்பர் 2017-ம் ஆண்டே அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். ஆனால், கால சூழ்நிலையால் அது முடியவில்லை.

எல்லாருக்கும் ஒரு தலையெழுத்து இருக்கு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம். அந்த நாள் வந்துவிட்டது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும். தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.

என் ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை. கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன்.

சிறுநீரக் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால் கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால் தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன்.

ஜாதி , மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.அற்புதம் அதிசயம் நிகழும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணாத்த படத்தை முடித்து தர வேண்டியது என் கடமை. அதை சரியான நேரத்தில் முடித்து தருவேன் என உறுதி தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே