மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடசென்னை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, வடகிழக்கு பருவமழையிலிருந்து சேதங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி தென்சென்னை பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, வடசென்னை பகுதியில் முதல்வர் இன்று (செப்.,28) ஆய்வு செய்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரிட்டானியா நகர், புழல் உபரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்புப் பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே