மே 2 – காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை – மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரத சாகு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். பிறகு, 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவது தொடங்கும்.

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கரோனா சோதனை செய்து கொண்ட சான்று அவசியமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே