உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் 4வது இடத்திற்கு சென்றது இந்தியா!

உலகளவில் இந்தியா 6-வது இடத்திலிருந்து தற்போது 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக, நாள்தோறும் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஏற்கனவே உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 6-வது இடத்திலிருந்து தற்போது 4-வது இடத்திற்கு வந்துள்ளது.

இதற்கு ஒரே கரணம் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை 1000ம் க்கு மேல் இருப்பது தான் இனி வரும் காலங்களில் முதல் இடத்தே தொடுமா ?

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 70 லட்சத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது.

இந்தியாவில் 297,001 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,8,473 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரே நாளில் 9,846பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366 பேர் உயிரிழந்துள்ளனர். 

146,074 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில், 142,454 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே