நான் திரைக்கு வர இவர்தான் காரணம்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னராக இருக்கும் விஜய் இன்று தன் பிறந்தநாளை வீட்டிலிருந்த படியே கொண்டாடுகிறார். கொரோனா ஊரடங்கால் அனைத்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர் மூடப்பட்டதால் கடந்த ஏப்ரல் 9 ம் தேதியே வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படம் தள்ளிப்போன வறுத்தம் இருந்தாலும் விஜய்யின் பிறந்த நாள் இன்று என்பதால் ரசிகர்கள் நிறையவே உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்த டேக்குகள் காலை முதலே டிரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே