பசியே எடுக்க மாட்டேங்குதா? என்ன காரணம்? எப்படி பசியை தூண்டலாம்?

பொதுவாக உடலில் எரிபொருள் குறைவாக இயங்கும் போது பசி மற்றும் பசி உணர்வு உருவாகிறது. இது பசியின் அளவை கட்டுப்படுத்தும் விஷயம் மட்டும் கிடையாது. இரத்த சர்க்கரை அளவு குறைதல் அல்லது சில பசி ஹார்மோன்களின் அதிகரிப்பு போன்ற காரணிகளாலும் இது கட்டுப்படுத்தப்படுகிறது. மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் உங்கள் பசியையும் பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் சில பேருக்கு நீண்ட காலங்களாக பசி உணர்வு சரியாக இல்லாமல் இருக்கலாம். அப்படி பசியை உணராததற்கு சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இங்கே அறிந்து கொள்வோம்.
​கவலை
நீங்கள் நாள் முழுவதும் கவலையுடன் காணப்படுவது உங்க பசியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது செரிமானம் மற்றும் பசியை மெதுவாக்கும் சில ஹார்மோன்களை வெளியிடுகிறது. நீங்கள் ஒரு கவலைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டால் குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளையும் சந்திக்க நேரிடலாம். இது உங்க பசியை பாதிக்கும்.

​மனச்சோர்வு
மனச்சோர்வு பல காலமாக பசியின்மைக்கு வழி வகுக்கும் விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மூளையின் சில பகுதிகளை மனச் பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் நிறைய பேருக்கு பசி உணர்வு சரியாக ஏற்படுவதில்லை.

​மன அழுத்தம்
மன அழுத்தம் குமட்டல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இது பசியின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடுமையான மன அழுத்தம் உங்க மனநிலையை மாற்றி விடும். இது உங்க பசி தாக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது.

​உடல்நலமின்மை
காய்ச்சல் மற்றும் வயிற்று தொற்று போன்ற உடல் நல பிரச்சினைகள் பசியின்மைக்கு காரணமாகின்றன. இந்த சுவாச நோய்கள் வாசனை உணர்வை தடுக்கிறது. இதனால் உணவு விருப்பத்தகாததாக மாறுகிறது. குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் உண்டாகி பசி உண்டாகுவதை தடுக்கிறது.

​கர்ப்பம்
கர்ப்ப காலத்திலும் பசி உணர்வு குறைந்து போதல் மற்றும் சில உணவுகளில் இருந்து வெறுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்தில் குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் பசியை உணர்வது கடினமாக இருக்கும்.

​மருந்துகள்
ஆன்டி பயாடிக் மருந்துகள் நிறைய பசியின்மை போன்ற பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. ஆண்டிஹைபர்டென்சிவ்ஸ் மற்றும் மயக்க மருந்துகள் போன்றவை பெரும்பாலும் சோர்வு மற்றும் குமட்டல் போன்ற பக்க விளைவுகளுடன் இருக்கும். புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை உங்கள் பசியின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

​ஒரு மருத்துவரை பார்ப்பது எப்போது முக்கியம்
கவலைப்படுவதால் மட்டுமே பசியின்மை ஏற்படுவதில்லை.

இதைத்தவிர வேறு காரணங்களால் உங்களுக்கு பசியின்மை பிரச்சினை தொடர்ந்தால் உடனே நீங்கள் ஒரு மருத்துவ உதவியை நாட வேண்டும்.

விழுங்குவதில் சிரமம், குமட்டல், அடிக்கடி உண்ணும் போது ஏற்படும் வலி போன்றவற்றால் எடை இழப்பு பிரச்சினை உண்டாகலாம். உங்க பசியை தூண்டும் சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

​நறுமணம் வீசும் உணவுகள்
பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு சமையுங்கள். உங்க உணவு எவ்வளவு சுவையானதாக இருக்கிறதோ அது தான் உங்க பசியை தூண்டும். இது உணவை உண்ணவும் ருசிக்கவும் உங்களுக்கு உதவி செய்யும்.

​அதிக கலோரிகளுடன் சிறிய உணவு
உங்களுக்கு பசி இல்லை என்றால் உங்களை கட்டாயப்படுத்தி உண்ண வேண்டாம். அதற்கு பதிலாக, கலோரிகளால் நிரம்பிய சிறிய உணவை உண்ணுங்கள், இதனால் உங்கள் உடலின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

​நீங்கள் விரும்புவதை சாப்பிடுங்கள்
சில நேரங்களில் உங்க உடலானது என்ன கேட்கிறதோ அதை மட்டுமே சாப்பிடுவது முக்கியம். இருப்பினும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது இன்னும் நல்லது. பிறகு பசி உணர்வு வந்த பிறகு வேறு உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

​சாப்பிட ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்
சிலருக்கு வேலையில் பிஸியாக இருக்கும் போது சாப்பிட வேண்டும் என்பதையே மறந்து விடுவார்கள். அந்த மாதிரியான நபர்கள் உண்ணும் அட்டவணையை கண்காணித்து உணவு மற்றும் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளும் நேரத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே