நாடு முழுவதும் வேகமாக உயரும் கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 81,466 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 81,466 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,23,03,131 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 459 போ ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,63,396 -ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ச்சியாக 23-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,14,696 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மீட்பு விகிதம் 93.89 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 50,356 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,15,25,039 ஆகவும், இறப்பு விகிதம் 1.33 சதவீதமாகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) படி, நாட்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 24,59,12,587 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,13,966 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரை நாடு முழுவதும் 6,87,89,138 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மட்டும் 36,71,242 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே