சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில்,9 சிங்கங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் 9 வயது நீலா என்ற பெண் சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.இதனை தொடர்ந்து மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும்,பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு பசியின்மை,சளி தொந்தரவு இருந்ததால் அவைகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னர்,மற்ற சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து,தற்போது 8 சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிகிச்சை வழங்குவது மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்துதல் குறித்த பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே