”முதல் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வேன்”- அமைச்சர் பாண்டியராஜன்!

திருவேற்காடு அருகேயுள்ள அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் 51 மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும், என்று அறிவித்தார். மேலும், மருத்துவர் என்ற முறையில் அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போடும்போது நாங்கள் முதல் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை, தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு கடைப்பிடித்தால், விரைவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகும் என்றும், அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்திற்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 414 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே