இபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை..!

தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் வழக்கமாக துணை முதல்வர் பங்கேற்று வந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 7-ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே