மகாராஷ்டிரா: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து – உயிரிழப்பு 10ஆக உயர்வு..!!

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டி நகரத்தில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மேலும் சிலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.

விபத்தை தொடர்ந்து, மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

இடிபாடுகளில் சிக்கியிருந்த 25 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லாமல் மேலும் 25 பேர் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1984ம் ஆண்டு இந்த கட்டடம் கட்டப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே