#BREAKING : தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) 5980 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,73,410ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் முன்பைவிட கொரோனா தொற்று சற்று குறைந்திருந்தாலும் நாள்தோறும் பாதிப்பு கணிசமாக பதிவாகி வருகிறது.

இன்று ஒரே நாளில் 5980 பேருக்கு புதிகாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,73,410ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 5603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,13,280 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 406 பேரும், கோவை மாவட்டத்தில் 389 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 384 பேரும், கடலூர் மாவட்டத்தில் 309 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனாவால் இன்று 80 பேர் பலியாகியுள்ளனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே