முதல்வர் பழனிசாமி வீட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு..!

சேலத்தில் உள்ள வீட்டில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.

சேலத்தில் உள்ள முதல்வர் பழனிசாமி எடப்பாடியில் உள்ள அவரது இல்லத்தின் வெளியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டடுள்ளது.

அந்த சிலைக்கு பூஜைகள் செய்து, தீபார்த்தனை காட்டி முதல்வர் பழனிசாமி வழிபட்டார்.

சமூக இடைவெளியுடன் அவரவர் வீடுகளிலேயே விழாக்களை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதனை நிரூபிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சிலையை பூஜைகள் செய்து, தோப்புக்கரணம் போட்டு விழாவை கொண்டாடினார்.

இதில், அவரது மனைவி மற்றும் மகன் பங்கேற்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே